Home

untitled

Chennai Bookfair நடைபெற்ற நாட்கள் ஜூன் 1 to 13. இவர்கள் எனது ‘நிஷாகந்தி’ நாவலை இலவச விநியோகம் செய்தது ஜூன் 11 முதல்..!

Fair முடியும்வரை…  தாங்கமுடியாத அளவுக்கு… என் கதைகளின் மீது ஆர்வம் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். இது புத்தக விற்பனையை தடுக்கும் முயற்சி. Thanks to the original uploader என்று யாரோ செய்தது போல் நாடகமாடுவார்கள்.அவர்களுக்கு மிகவும் வேண்டப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளையும் இதேபோல் அவசர விநியோகம் செய்திருக்கலாமே?

nishagandhi-hansika-suga-pdf-download-2shared

இவர்களிடம் ஒரு கேள்வி. Romance writer என்று நான் மட்டும்தான் இருக்கிறேனா? ஆன்லைனில் உலவிக் கொண்டிருக்கும் அத்தனை romance writer களின் கதைகளையும் [both raw script and printed] இதேபோல் சுற்றலில் விடுவார்களா?  ஒரு சிலரிடம் பயந்து நடுங்குகிறார்களே? எதனால்?


முகநூலில் எனக்கு எதிராக” வெட்டிக்கோஷம் “ போட்டவர்களே..! நான் என்ன செய்யவேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை.

பிரச்சனையின் அடிப்படை என்னவென்றே தெரிந்துகொள்ளாமல், பச்சைக் கலரு ஜிங்குசாக்…செகப்பு கலரு ஜிங்குசாக் என்று நீங்கள் அவர்களுக்கு தாளம் தட்டினால், நானும் தட்டவேண்டுமா என்ன?

என் உழைப்பைத் திருடுவதற்குப் பெயர் நட்பு என்றால், அப்படியொரு விளங்காத நட்பு எனக்குத் தேவையில்லை. திருடப்பட்ட எனது கதைகள் வேறு பெயரில் புத்தகமாக வெளிவந்தால், அதற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை உங்களைப் போன்ற ஜால்ராக்கள் கொடுப்பீர்களா? சுற்றலில் விட்டவர்கள் எதற்காக copyright பகுதியை நீக்கினார்கள்? நீக்கவேண்டிய அவசியம் என்ன வந்தது? உள்நோக்கம் இல்லாமலா நடக்கிறது ?

எந்தக் கதை எந்த ரூபத்தில் வந்தாலும், வாசகர்கள் கண்டுபிடித்து விடுவார்கள்.


கோஷம் போட்டவர்களே…! உங்களுக்கு அந்த குறிப்பிட்ட நபர்களின் மீது அதீத அக்கறை இருக்குமானால், நட்புக்காக நீங்கள் [உ]யிரையே கொடுப்பவர்களாக இருந்தால்,

நீங்கள் எழுதிய அனைத்துக் கதைகளின் ஒரிஜனல் ஸ்க்ரிப்ட் download… முக்கியமாக இன்னும் அச்சில் ஏறாத கதைகள் [காப்பிரைட்ஸ் நீக்கப்பட்டு]

அவர்களிடம் கொடுத்து, மக்கள் அனைவரையும் இலவசமாக என்டர்டெயின் செய்யுங்களேன். உங்கள் வள்ளல் தன்மை என்னவென்று ஊருக்கே புலப்படும்.

உங்கள் உழைப்பு, நம்பிக்கை, நாணயம்…இத்யாதி என்று  முழுவதையும் அவர்களுக்குத் தாரைவார்த்துக் கொடுங்கள்….நட்பின் இல…க்…கண…ங்களே…!

“அன்பு குறைந்ததால் பேச்சு குறைந்ததோ?”…. ஏன்? உனக்கு வண்டி வண்டியா அன்பு இருக்கில்ல. உன் ஸ்க்ரிப்ட் எல்லாத்தையும் தூக்கி தானமா கொடு. யாரு வேண்டாங்கறா? ‘பிரத்யேகமாக எழுதப்பட்டது’ ன்னு பத்திரமா அச்சுல ஏத்தறியே கண்ணு. உனக்கொரு நியாயம், அடுத்தவளுக்கு ஒரு நியாயமா?

“நான் என்று இல்லாமல் நாமென்று இருப்போம்.”……. தாராளமா இருப்போமே? முதல்ல உன் அச்சிடப்படாத கதைகள் எல்லாத்தையும் free download போட்டுட்டு, அப்புறமா டயலாக்கை அள்ளி வீசு. உன்னோட வெப்சைட்ல caution notice ரொம்ப ஸ்ட்ராங்கா போட்டிருக்கியாம். கேள்விப்பட்டேன். எதுக்காக அப்படிப் போடணும்? நீதான் நாம் என்று இருக்கறவளாச்சே..! யாரோ திங்கட்டும்-ன்னு விடு.

இன்னும் யாரெல்லாம் என்ன சொன்னாங்கன்னு லிஸ்ட் தரவா?அல்லது அதற்கு பதில் தரவா?


நாம் என்று இருந்ததற்கான பலன்தான், நான் இப்ப அனுபவிக்கிற இந்த நம்பிக்கை துரோகம். எனக்குக் கெடுதல் செய்யறவங்க எவ்வளவு நாள் நல்லா இருக்கப் போறாங்க? சத்ரு சம்ஹார வேலன் நிச்சயம் அவர்களை, அவர்கள் குடும்பத்தை, வம்சத்தை என்று எல்லோரையும் தண்டிப்பான்.


தீமையிலும் ஒரு நன்மை. எழுத்துலகை விட்டு நான் அழியவேண்டும் என்று காத்திருந்த கூட்டுக் களவாணிகள் யார் என்பதை அடையாளம் கண்டு கொண்டேன். அண்ணன் எப்போது சாவான்… திண்ணை எப்போது காலியாகும் என்று காத்திருந்தார்கள் போலும். என் கதைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த முகநூல் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி. தமிழை நேசிக்கும் வாசகர்கள் இருக்கும்வரை எந்த எழுத்தாளனுக்கும் மரணம் நிகழ்ந்துவிடாது.

சூழ்நிலைகள் இப்படியிருந்தால் எந்த நம்பிக்கையில் இங்கே கதைகளைப் பதிவிடுவது? புத்தகமாகவே தருகிறேன். காத்திருங்கள்.

untitled

untitled

untitledhs-tamil-novels

untitled

%e0%ae%89%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a8%e0%af%80

untitled