உன்னாலே.. உன்னாலே..

052.jpg

வாசகர்களே…!

நான் ஏற்கனவே அறிவித்தபடி புத்தகம் ஜூன் 14, 2014 முதல் சென்னையில் விற்பனைக்கு வந்துவிட்டது. மற்ற ஊர்களில் இன்னும் நான்கு அல்லது ஐந்து நாட்களில் கிடைக்கலாம்.

இனி வரும் நாட்களில் புத்தகக் கதைகளைப் பற்றிய விமர்சனங்களை ‘BOOK REVIEW’ என்ற இந்தப் பகுதியில் எழுதுமாறு வாசகர்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

எத்தனையோ புதிய வாசகர்கள் விமர்சனங்களைப் படித்துவிட்டுத் தான் இந்த எழுத்தாளரின் கதையைப் படிக்கலாமா? அப்படியே ஜூட் விடலாமா என்று முடிவெடுப்பார்கள். நீங்கள் எங்கெங்கோ எழுதி வைக்கும் கருத்துக்களை அவர்களால் தேடிப் படிக்க முடியுமா?

ஆன்லைனில் எங்கெங்கோ எழுதப்படும் என் கதைகளின் விமர்சனங்களை நண்பர்களின் உதவியில்லாமல் தெரிந்து கொள்ள முடிவதில்லை. நெருங்கிய தோழிகள்  எனக்கு லிங்க் அனுப்பினால் மட்டுமே சாத்தியம்.

கதை நன்றாக உள்ளதா? இல்லையா? மனதுக்கு நிறைவானதா என்பதை உங்கள் சுய வார்த்தைகளில் எழுதுங்கள்.

கதைக்காக எழுதப்படும் விமர்சனம் எது? பகைக்காக எழுதப்படும் விமர்சனம் எது என்பதை என் ரெகுலர் வாசகர்கள் எளிதாக இனம் கண்டு கொள்வார்கள். நாங்கள் முன்னூறு பக்கம் எழுதும் கதையை முப்பது வரிகளில் எங்களுக்கே திருப்பிச் சொல்லுவதற்குப் பெயர் விமர்சனம் அல்ல. ‘VERDICT’ என்பதற்கும் ‘COMMENT’ என்பதற்கும் வித்தியாசம் தெரிந்து எழுதுவது உத்தமம்.

புதிதாக இங்கு அறிமுகமாகும் வாசகர்களுக்கு உங்கள் நாகரிகமான விமர்சனங்கள் வழி காட்டட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

‘உன்னாலே…. உன்னாலே ‘ கதைக்கான வாசகர் கருத்துக்களை விரைவில் எதிர்பார்க்கிறேன். நன்றி…!

உயிரே உயிரே உருகாதே – calameo

http://en.calameo.com/books/0021170941a3f7cc3a0a1

பூக்களின் இதயம் – calameo

http://en.calameo.com/books/0021170948a999c4ab503

விழியே உனக்கு உயிரானேன் – Novel review

Please drop your review or comments here.

சஹானா – 5

கண்ணன் மலர்க் கள்வனடி -16

கண்ணன் மலர்க் கள்வனடி-14

கண்ணன் மலர்க் கள்வனடி-13